OUR CLIENTS
46 ஆண்டுகளுக்குப் பின் கருணாநிதியின் மூக்குக் கண்ணாடி மாற்றம்
46 ஆண்டுகளுக்குப் பின் கருணாநிதியின் மூக்குக் கண்ணாடி மாற்றம் Posted on 21-Nov-2017 46 ஆண்டுகளுக்குப் பின் கருணாநிதியின் மூக்குக் கண்ணாடி மாற்றம்

சென்னை, நவ.21
உடல்நலம் குன்றியபின் சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து வரும் திமுக தலைவர் மு. கருணாநிதியின் மூக்குக் கண்ணாடி புதிதாக மாற்றப்பட்டுள்ளது. கறுப்புக் கண்ணாடிக்கு பதிலாக இனி வெள்ளை கண்ணாடி அணியலாம் என டாக்டர்கள் பரிந்துரைத்ததால் அவர் இனி வெள்ளைக் கண்ணாடியே அணிவார் எனக் கூறப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி அணிந்திருந்த கருப்புக் கண்ணாடி மிக தடிமனாகவும் கூடிதல் எடையுடனும் இருப்பதால், அது அவரது நெற்றிப்பொட்டுப் பகுதியை அழுத்தி வருவதனால் அவருக்கு பிரச்னை ஏற்படுவதையும் மருத்துவர்கள் சமீபத்தில் கண்டறிந்தனர். அதனால் புது பிரேம் தேடினார்கள். 

சென்னையில் உள்ள விஜயா ஆப்டிக்கல்ஸ் நிறுவன தலைமை நிர்வாகி சேஷன் ஜெயராமன் கருணாநிதிக்கு பொருத்தமான பிரேமை கடந்த 40 நாட்களாகத் தேடினார். இறுதியில், ஜெர்மனியில் இருந்து ஜெயராமன் நண்பர் ஒருவர் வாங்கி அனுப்பிய பிரேம்தான் திமுக தலைவருக்கு சரியாக அமைந்தது.  அதனால், கண் பார்வைக்கு ஏற்ற வகையில் புதிய வகை, எடை மிகவும் குறைவான மூக்குக் கண்ணாடி திமுக தலைவர் கருணாநிதிக்கு வழங்கப்பட்டு, அதனை அவர் அணிந்துள்ளார்.

46 ஆண்டுகளுக்கு முன்பு நேரிட்ட விபத்து ஒன்றில் இடது கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 1971ம் ஆண்டு அமெரிக்கா சென்று கண்ணில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார் கருணாநிதி. அப்போதிலிருந்து கறுப்பு நிற தடிமனான கண்ணாடியையே கருணாநிதி பயன்படுத்தி வந்தார். இனி அவர் வெள்ளைக்கண்ணாடி அணிவார்.

மகாத்மா காந்தியின் கண்ணாடியைப் போலவே, திமுக தலைவர் கருணாநிதிக்கும் கறுப்புக் கண்ணாடி ஒரு அடையாளமாகவே மாறியிருந்தது. இந்த நிலையில், சுமார் 46 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வகை கண்ணாடியை திமுக தலைவர் கருணாநிதி அணிந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

Label