OUR CLIENTS
அணிகள் இணைந்தும் மனங்கள் இணையவில்லை : மைத்ரேயன் கருத்தால் சர்ச்சை
அணிகள் இணைந்தும் மனங்கள் இணையவில்லை : மைத்ரேயன் கருத்தால் சர்ச்சை Posted on 22-Nov-2017 அணிகள் இணைந்தும் மனங்கள் இணையவில்லை  : மைத்ரேயன் கருத்தால் சர்ச்சை

சென்னை, நவ.22
அதிமுக அணிகள் இணைந்து 3 மாதங்கள் கடந்த பிறகும் மனங்கள் இணையவில்லை என்று அதிமுக எம்.பி. மைத்ரேயன் கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்து பெரும்சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க. தலைமைக்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தினார். இதனால், அ.தி.மு.க 2 அணிகளாகப் பிரிந்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணை அறிவிக்க வேண்டும், சசிகலா குடும்பத்தை அதிமுக அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும்  என பன்னீர்செல்வம் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தார், அக்கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓபிஎஸ் அணியும் ஏறக்குறைய 6 மாதங்களுக்குப் பின்னர் கடந்த ஆகஸ்ட்டில் இரு அணிகளும் ஒன்றாக இணைந்தன.  தமிழக முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும் இருந்து வருகின்றனர். அ.தி.மு.க இரு அணிகளும் இணைந்து நேற்றுடன் 3 மாதங்களாகிறது.

இந்த நிலையில், மாநிலங்களவை எம்.பி-யும், பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மைத்ரேயன், அ.தி.மு.க அணிகள் இடையே சலசலப்பு இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று பேஸ் புக்கில் கருத்து தெரிவித்துள்ளார்.   'ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் அணிகள் இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று, நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?'   என்று மைத்ரேயன்  கேள்விக்குறியை தனது பேஸ்புக் பதிவில் வெளியிட்டுள்ளார்.

மைத்ரேயனின் இந்தப் பதிவிற்கு அதிமுக அம்மா அணியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது “மைத்ரேயன் மனதில் 6.5 ரிக்டர் அளவு பூகம்பம்” என கருத்து தெரிவித்துள்ளார்.

Label