OUR CLIENTS
சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவின் தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்வு
சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவின் தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்வு Posted on 22-Nov-2017 சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவின் தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்வு

ஐ.நா. சபை, நவ.22
சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவின் தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டார்.

சர்வதேச நீதிமன்றதுக்கு ஐந்து நீதிபதிகள் தேர்வு செய்யப்பட விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்தன. இந்தியாவின் தல்வீர் பண்டாரியும், பிரிட்டனின் கிறிஸ்டோபர் கிரீன்வுட்டும் கடைசி நீதிபதி நியமனத்துக்கு மோதினார்கள்.

நியமன விதிப்படி ஐ.நா. சபை பொதுப் பேரவையிலும் பாதுகாப்பு கவுன்சிலும் கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோரே நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார். ஐ.நா. பொதுப் பேரவையில் பண்டாரி கூடுதல் வாக்குகள் பெற்றார். ஆனாலும் பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பினர்களில் 5 உறுப்பினர்கள் ஆதரவு மட்டுமே பண்டாரிக்கு கிடைத்தது. அதனால் பண்டாரியும் வெற்றி பெற முடியவில்லை. பிரிட்டன் வேட்பாளர் கிரீன்வுட்டும் வெற்றி பெற முடியவில்லை.  நவம்பர் 20ந் தேதி திங்களன்று 11வது சுற்று வாக்கெடுப்பு நடைபெறும்  என அறிவிக்கப்பட்டது. இரு வேட்பாளர்களும் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் பிரிட்டனின் வேட்பாளர் கிரின்வுட் திடீரென்று போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக ஐ.நா. பொதுப்பேரவைக்கும் பாதுகாப்பு கவுன்சிலுக்கும் கடிதம் அனுப்பினார்.

தல்வீர் பண்டாரிக்கு மட்டுமே பொதுப் பேரவையிலும், பாதுகாப்பு கவுன்சிலிலும் வாக்கெடுப்பு நடந்தது.  பொதுப்பேரவையில், 193 வாக்குகளும் பாதுகாப்பு கவுன்சிலில் 15 வாக்குகளும் தல்வீர் பண்டாரிக்கு கிடைத்தன. அவர் பெரும்பான்மை வாக்குகள் பெற்றதால் அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

எங்களது இனிய நண்பர் இந்தியா வெற்றி பெற்றது பெரிதும் மகிழ்ச்சியளிக்கிறது  என பிரிட்டன் அரசு கூறியது.    தல்வீர் பண்டாரியின் வெற்றி பற்றிய செய்தியை இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்தார். தல்வீர் பண்டாரிக்கு அவர் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.  

தல்வீர் பண்டாரியின் வெற்றிக்கு பாடுபட்ட இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி சயீத் அக்பருதீனுக்கு பாராட்டு தெரிவித்தார்.  தல்வீர் பண்டாரியை உறுதிசெய்த பெருமை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கே சேரும் என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.  பொதுப் பேரவை உறுப்பினர்கள், பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.  தல்வீர் பண்டாரியின் வெற்றி இந்திய தூதரக முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி என்று பாஜக தலைவர் அமித் ஷா கூறினார்.

பண்டாரியின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் நியுயார்க் நகரில் நேற்று வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐ.நா. சபையின் உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அவர்கள் பண்டாரியை பாராட்டி பேசினார்கள்.

Label