OUR CLIENTS
சேகர் ரெட்டியுடன் ஸ்டாலின், உதயநிதிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் உண்டா? : சைதை துரைசாமி கேள்வி கணைகள்
சேகர் ரெட்டியுடன் ஸ்டாலின், உதயநிதிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் உண்டா? : சைதை துரைசாமி கேள்வி கணைகள் Posted on 23-Nov-2017 சேகர் ரெட்டியுடன் ஸ்டாலின், உதயநிதிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் உண்டா?  : சைதை துரைசாமி கேள்வி கணைகள்

சென்னை, நவ.23
சேகர் ரெட்டியுடன், ஸ்டாலின் மற்றும் உதயநிதிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் உண்டா? இல்லையா? என்று சைதை துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய  சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, கல்வியை இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் அறக்கட்டளை நடத்தி வருகிறேன். அறக்கட்டளை மூலம் பல உயரதிகாரிகளை உருவாக்கி வருகிறேன்.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் ஆண்டிற்கு 120 கோடி ரூபாய் பெற்றிருக்க முடியும்.  என் மீது திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நிரூபித்தால் அரசியல் வாழ்க்கையை விட்டே செல்கிறேன்.  ஸ்டாலின் மகன் வெளிநாட்டில் இருந்து ஹேம்மர் கார் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை என்னவாயிற்று?. மற்ற வருமான வரித்துறை சோதனை குறித்து நியாயம் கேட்கும் மனுநீதிச் சோழனின் மகன் ஸ்டாலின் இதற்கு விளக்கம் அளிப்பாரா?   ஸ்டாலின் மற்றும் உதயநிதி, சேகர் ரெட்டிக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கல் உண்டா? இல்லையா? என்று முன்னாள் மேயர் சைதை துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Label