OUR CLIENTS
டிசம்பர் 15ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூடுகிறது : மத்திய அமைச்சரவை முடிவு
டிசம்பர் 15ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூடுகிறது : மத்திய அமைச்சரவை முடிவு Posted on 23-Nov-2017 டிசம்பர் 15ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை  பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூடுகிறது  :  மத்திய அமைச்சரவை முடிவு

 புதுடெல்லி, நவ.23
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரை டிசம்பர் 15-ம் தேதி தொடங்க மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை  குஜராத் தேர்தல் நடைபெற உள்ளதால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து அறிவிக்காமல் மத்திய அரசு தாமதப்படுத்தி வருகிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. 

இந்நிலையில், பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 15ம் தேதி முதல் தொடங்க உள்ளது என நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மத்திய அமைச்சரவையின் கூட்டம் நேற்று  நடைபெற்றது. அதில் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 15-ம் தேதி தொடங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குளிர்கால கூட்டத்தொடரை ஜனவரி 5-ம் தேதி வரை நடத்தவும் முடிவானது. 

அமைச்சரவையின் இந்த முடிவானது குடியரசுத் தலைவருக்கு தீர்மானமாக அனுப்பப்படும். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் பற்றிய முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Label