OUR CLIENTS
முதல்முறையாக போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி : நிர்மலா சீதாராமன் வாழ்த்து
முதல்முறையாக போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி : நிர்மலா சீதாராமன் வாழ்த்து Posted on 23-Nov-2017 முதல்முறையாக போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி :   நிர்மலா சீதாராமன் வாழ்த்து

புதுடெல்லி, நவ.23
இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை முதல்முறையாக சுகோய் ரக போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த சோதனை வெற்றியடைந்ததற்கு பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

உலகின் வேகமான ஏவுகணையான பிரம்மோஸ் ஏவுகணைகள் 290 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் ஆற்றல் படைத்தவை. அத்தகைய பிரம்மோஸ் ஏவுகணைகள் இதற்கு முன் நிலம் மற்றும் போர்கப்பலில் இருந்து வெற்றிகரமாக ஏவிச் சோதித்துள்ளனர். இந்நிலையில் இந்திய ராணுவ வரலாற்றில் முதல்முறையாக ஒரு போர் விமானத்தில் இருந்து நேற்று பிரம்மோஸ் ஏவுகணை ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் ‘‘ சுகோய் -30 எம்.கே.ஐ ரக போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. 2268 கிலோ எடை கொண்ட பிரம்மோஸ் ஏவுகணை சுகோய் போர் விமானத்தால் ஏவப்பட்ட அதிக எடை கொண்ட ஏவுகணையாகும்.  இந்த சோதனை வெற்றியால் இனி பிரம்மோஸ் ஏவுகணையை நிலம்,நீர், ஆகாயம் ஆகிய மூன்று நிலைகளிலும் இருந்து இந்திய ராணுவத்தால் ஏவ முடியும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றிப்பெற்றதை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்தார். பிரம்மோஸ் ஏவுகணையை உருவாக்கிய விஞ்ஞானிகள் குழுவினருக்கு நிர்மலா சீதாராமன் தன் பாராட்டுக்களைத் தெரிவித்தார். 

Label