OUR CLIENTS
நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் Posted on 23-Nov-2017 நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 புதுடெல்லி, நவ.22
உச்சநீதிமன்றம் மற்றும் 24  உயர்நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை  நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

உச்சநீதிமன்றம் மற்றும் 24  உயர்நீதிமன்றங்களில்  பணியாற்றும் நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்தி வழங்க பரிசீலிக்க வேண்டும் என  உச்சநீதிமன்றம்  முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு பரிந்துரைத்திருந்தார். ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் வெளியான பின்னர் இவ்விகாரம் தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சகம் பரிசீலித்து வந்தது.

இந்நிலையில், தலைநகர் புதுடெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை  கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உச்சநீதிமன்றம்  மற்றும் நாடு முழுவதும் உள்ள 24  உயர்நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை  நேற்று ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, உச்சநீதிமன்றம்  நீதிபதிகளுக்கு பிடித்தம்போக பிறவகை படிகளுடன் சேர்த்து மாதந்தோறும் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. உச்சநீதிமன்றம்   தலைமை நீதிபதிக்கு இதைவிட சற்று அதிகப்படியான தொகை கிடைக்கும். மாநில உயர்நீதிமன்றங்களில்  பணியாற்றும் நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம்  நீதிபதிகளைவிட சற்று குறைவான தொகை சம்பளமாக அளிக்கப்படுகிறது.

மேலும், பணியில் உள்ள நீதிபதிகளுக்கு வாடகை இல்லாத வீடு, அலுவலக உதவியாளர், கார் டிரைவர் போன்ற வசதிகளும் செய்து தரப்படுகிறது.  இன்றைய முடிவின்படி, நீதிபதிகளின் சம்பளம் எத்தனை சதவீதம் உயர்த்தி வழங்கப்படும்? என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Label