OUR CLIENTS
இந்திய கப்பல் கழக சரக்கு கப்பல் மும்பை கடலில் மூழ்கியது : 16 ஊழியர்களும் மீட்பு
இந்திய கப்பல் கழக சரக்கு கப்பல் மும்பை கடலில் மூழ்கியது : 16 ஊழியர்களும் மீட்பு Posted on 23-Nov-2017 இந்திய கப்பல் கழக சரக்கு கப்பல் மும்பை கடலில் மூழ்கியது :  16 ஊழியர்களும்  மீட்பு

மும்பை, நவ.23
இந்திய கப்பல் கழகத்திற்கு உரிய சரக்கு கப்பல் ஒன்று மும்பை கடலோரம் மூழ்கி விபத்திற்குள்ளானது. கப்பலில் இருந்த 16 கப்பல் ஊழியர்களும் மீடகப்பட்டனர்.

இந்திய கப்பல் கழகத்தின் கப்பல் ரத்னா என்ற கப்பல் நேற்று முன் தினம் இரவு 7.30 மணியளவில் மும்பை கடலோரம் மூழ்கியது. இதனை தொடர்ந்து அந்த கப்பலில் பயணம் செய்த அனைத்து 16 பேரும் மீட்கப்பட்டு விட்டனர்.

அவர்களை அருகில் சென்று கொண்டிருந்த மற்றொரு கப்பலில் இருந்தவர்கள் மீட்டுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் மும்பைக்கு செல்கின்றனர்.  ரத்னா கப்பலுக்கும்  ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கும் இடையே  ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.

துரப்பணப்பணியில் ஈடுபட்டுள்ள ஒரு கப்பலுக்கு ரத்னா உதவ அந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.  கப்பல் மூழ்கியது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. எனினும், ரத்னாவின் இயந்திர அறைக்குள் நீர் நிரம்பியதால் கப்பல் மூழ்கி இருக்கக் கூடும் என முதற்கட்ட ஆய்வு தெரிவிக்கின்றது.

Label