OUR CLIENTS
டீ விற்க செல்லுங்கள் என மோடிக்கு எதிரான மீம்ஸ் : இளைஞர் காங்கிரஸ் கட்சி டுவிட்டர் செய்தியால் பாஜக கோபம்
டீ விற்க செல்லுங்கள் என மோடிக்கு எதிரான மீம்ஸ் : இளைஞர் காங்கிரஸ் கட்சி டுவிட்டர் செய்தியால் பாஜக கோபம் Posted on 23-Nov-2017 டீ விற்க செல்லுங்கள் என மோடிக்கு எதிரான  மீம்ஸ்  : இளைஞர் காங்கிரஸ் கட்சி டுவிட்டர் செய்தியால் பாஜக  கோபம்

புதுடெல்லி, நவ.23
பிரதமர் மோடியிடம் நீங்கள்  டீ விற்க செல்லுங்கள் என்று பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே கூறுவதாக இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் டுவிட்டரில் வெளியான செய்தி பாஜகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இளைஞர் காங்கிரஸ் கட்சியானது யுவதேஷ் என்ற பெயரில் டுவிட்டரில் நேற்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.  செய்தியுடன், பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஆகியோர் ஒன்றாக நிற்கும் புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது.  அதில், மோடி மற்ற இரு தலைவர்களிடம், எதிர்க்கட்சிகள் தன்னை இலக்காக கொண்டு மீம்கள் அனுப்புகின்றனர் என கூற முயல்கிறார். அவர் மெயின்மெயின் என கூறுகிறார். டிரம்ப் மீம் என கூற வேண்டும் என அதனை திருத்துகிறார்.
அதற்கு தெரசா மே, மோடியிடம், நீங்கள் சென்று டீ விற்பனை செய்யுங்கள் என கூறுகிறார் என்று பதிவாகியுள்ளது. செய்தி வெளியான 5 நிமிடங்களில்  உடனடியாக  நீக்கப்பட்டு விட்டது.

காங்கிரஸ் கட்சியின் இந்த டுவிட்டரால் பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் கடும் கோபத்துடன்  உள்ளனர்.

மத்திய அமைச்சர்கள்  டுவிட்டர் வழியே கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.  ரயில்வே மந்திரி பியூஷ் கோயல், இதுபோன்ற டுவிட்டர் செய்திகளால் ஏழைகளுக்கு எதிரான தனது மனநிலையை காங்கிரஸ் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. வரும் தேர்தல் அவர்களுக்கு உண்மையான சோதனையாக இருக்கும் என கூறியுள்ளார்.

தொடர்ந்து ஜே.பி. நட்டா, ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் தங்களது கண்டன கருத்துகளை டுவிட்டர் வழியே தெரிவித்துள்ளனர்.

எனினும், இதுபோன்ற மீம்களை நாங்கள் வன்மையாக மறுக்கிறோம். காங்கிரஸ் கட்சியானது பிரதமர் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினருக்கும் மரியாதை அளிக்கும் கலாசாரத்தினை கொண்டுள்ளது என காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Label