சிரியாவில் அலெப்போ நகரில் வான்தாக்குதல்கள்: பொது மக்கள் 51 பேர் பலி Posted on 15-Aug-2016
பெய்ரூட்:
5 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வந்த சிரியாவில் சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளபோதும், அலெப்போ நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்நாட்டுச்சண்டை உக்கிரமாக நடந்து வருகிறது.
அங்கு நேற்று முன்தினம் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள அலெப்போ நகரின் கிழக்கு பகுதியில் சிரியாவின் விமானப்படை நடத்திய வான் தாக்குதலில் அப்பாவி மக்கள் 15 பேர் கொல்லப்பட்டனர். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ நகரின் மேற்கு பகுதியில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய குண்டுவீச்சில் 9 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
அலெப்போவின் மேற்கு பகுதியில் உள்ள நகரங்களில் சிரியா மற்றும் ரஷியா நடத்திய வான்தாக்குதல்களில் 27 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களில் மொத்தம் 51 பேர் கொல்லப்பட்டதை சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் உறுதி செய்துள்ளது.