OUR CLIENTS
தேர்தல் ஆணையத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு : தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தகவல்
தேர்தல் ஆணையத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு : தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தகவல் Posted on 24-Nov-2017 தேர்தல் ஆணையத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு  : தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தகவல்

சென்னை, நவ.24
இரட்டை இலை சின்னத்தை ஒபிஎஸ் -ஈபிஎஸ் அணிக்கு ஒதுக்கியதை ஏற்க முடியாது, இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் எங்கள் தரப்பு வாதங்களை உரிய முறையில் தேர்தல் ஆணையம் கேட்கவில்லை. நாங்கள் சமர்ப்பித்த ஆதாரங்களையும் பார்வையிடவில்லை.

உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் அணியை உண்மையான சமாஜ்வாதி கட்சியாக அங்கீரித்ததை, இதனுடன் ஒப்பிட முடியாது. அவரது தந்தை முலாயம் சிங், அகிலேஷ் தரப்பை எதிர்க்கவில்லை.  ஆனால், அதிமுக நிலைமை வேறு. நாங்கள் எங்கள் தரப்பு வாதங்களை தொடர்ந்து வைத்துள்ளோம். தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்க முடியாது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறினார்.

Label