OUR CLIENTS
இரட்டை இலை இல்லாவிட்டாலும், ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியும் வெற்றியும் உறுதி : தினகரன் தில்லான பேட்டி
இரட்டை இலை இல்லாவிட்டாலும், ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியும் வெற்றியும் உறுதி : தினகரன் தில்லான பேட்டி Posted on 24-Nov-2017 இரட்டை இலை இல்லாவிட்டாலும், ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியும் வெற்றியும் உறுதி :   தினகரன் தில்லான பேட்டி

சேலம், நவ.24
இரட்டை இலை சின்னம் இல்லாவிட்டாலும் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என டிடிவி தினகரன் கூறினார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு, சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் தினகரன் போட்டியிட்டார். அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் சார்பில் மதுசூதனன் போட்டியிட்டார்.  இரு பிரிவினரும் மாற்றி மாற்றி ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால், இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இது தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரிகள். நேற்று இறுதி தீர்ப்பை வெளியிட்டனர்,  அதில் இரட்டை இலை சின்னம் முதல்வர் எடப்பாடி அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன் தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை என்று கூறினார். மேலும் 122 எம்எல்ஏக்கள், 37 எம்.பி.க்கள் ஆதரவுடன் இருந்தபோது இரட்டை இலையை முடக்கியது ஏன்? இந்த தீர்ப்பில் மத்திய அரசு தலையீடு உள்ளது.  முதல்வர் பழனிசாமிக்கு சட்டப்பேரவையில் அறுதி பெரும்பான்மை இல்லை என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு செல்ல இருக்கிறோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம்.

குஜராத் மாநிலத்தில் தலைமை செயலாளராக இருந்தவர் தலைமை தேர்தல் ஆணையர்; மத்திய அரசின் விருப்பப்படியே தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமிக்கு சட்டப்பேரவையில் அறுதி பெரும்பான்மை இல்லை என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.  இவ்வாறு டிடிவி தினகரன்  கூறினார்.

Label