OUR CLIENTS
கந்துவட்டிக் கொடுமையை திரைத்துறையும், சட்டமும் தடுக்கவேண்டும் : நடிகர் கமல் வேண்டுகோள்
கந்துவட்டிக் கொடுமையை திரைத்துறையும், சட்டமும் தடுக்கவேண்டும் : நடிகர் கமல் வேண்டுகோள் Posted on 24-Nov-2017 கந்துவட்டிக் கொடுமையை திரைத்துறையும், சட்டமும் தடுக்கவேண்டும்  : நடிகர் கமல் வேண்டுகோள்

சென்னை, நவ.24
கந்துவட்டிக் கொடுமை எழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை தடுத்தாகவேண்டும். இதற்கு உரிய சட்டம் இயற்ற வேண்டும். இ9த்ற்கு திரைத்துறையினர் இணைந்து செயலபட வேண்டும்   என்று நடிகர் கமல் ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த திரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமார் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரம் குறித்து டுவிட்டரில் கமல் கூறியதாவது:  கந்துவட்டிக் கொடுமை எழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதைச் சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாகவேண்டும்.  அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக் கூடாது.  குடும்பத்தார்க்கும் நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Label