OUR CLIENTS
முதல் முறையாக இந்தியாவில் உலக இணையவெளி மாநாடு 120 நாடுகளின் பிரதிநிதிகள் பங்பேற்பு சைபர் குற்றங்களைத் தடுக்க உலக நாடுகள் ஒருங்கிணைய வேண்டும்-பிரதமர் மோடி
முதல் முறையாக இந்தியாவில் உலக இணையவெளி மாநாடு 120 நாடுகளின் பிரதிநிதிகள் பங்பேற்பு சைபர் குற்றங்களைத் தடுக்க உலக நாடுகள் ஒருங்கிணைய வேண்டும்-பிரதமர் மோடி Posted on 24-Nov-2017 முதல் முறையாக இந்தியாவில்  உலக இணையவெளி மாநாடு  120 நாடுகளின் பிரதிநிதிகள் பங்பேற்பு சைபர் குற்றங்களைத் தடுக்க உலக நாடுகள் ஒருங்கிணைய வேண்டும்-பிரதமர் மோடி

புதுடெல்லி, நவ,24
இந்தியாவில் நடைபெற்று வரும் உலக இணையவெளி மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி உலகில் சைபர் குற்றங்களைத் தடுக்க உலக நாடுகள் இடையே தகவல் பறிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பு அவசியம் என கூறினார்.

சைபர் வெளி பாதுகாப்புக்கான உலக மாநாடு புதுடில்லியில் நேற்று துவங்கி இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த மாநாடு முதல் முறையாக இந்தியாவில் நடக்கிறது.

சைபர் குற்றங்கள் மற்றும் சைபர் வெளி பாதுகாப்பு தொடர்பாக  நடக்கும் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் 120 நாடுகளின் பிரதிநிதிகள், விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள், சைபர் நிபுணர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி தொழில்நுட்பம் மூலமாக  பல தடைகளை உடைத்து மக்களுக்கு சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகளை  வழங்க முடிகிறது என கூறினார்.

மேலும் உலகில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை தடுக்க சர்வதேச பாதுகாப்பு நிறுவனங்கள் இடையே தகவல் பறிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பு அவசியம் என்றும் தெரிவித்தார்.

அவரது உரையின் விவரம்
டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் வங்கி கணக்கு மற்றும் ஆதார் உதவியுடன் மக்களுக்கு சரியான வழியில் மானியங்கள் வழங்கப்படுகின்றன. அதனால் குறுக்கு வழியில் பணம் கையாடப்படுவது தடுக்கப்படுகிறது.  இதன் மூலம் சுமார் 1000 கோடி டாலர் சேமிக்கப்பட்டுள்ளது.  மேலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் விவசாயிகள் ,சிறு, குறு வணிகர்கள், முதியோர்கள் ஆகியோர் பலன் அடைகிறார்கள். எங்களின் டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த அனுபவங்கள் மற்றும் வெற்றிகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.  ஆனால் அதேசமயம் சைபர் வெளி பயங்கரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளின் விளையாட்டு அரங்கமாக மாற கூடாது. மக்களின் தனிப்பட்ட தகவல்களும், தேசிய பாதுகாப்பும் காக்கப்பட வேண்டும்.

இன்று இணையத்தளங்கள் ஹேக் செய்யப்படுவதாக வரும் செய்திகள் வெறும் ஆரம்பம் மட்டுமே. வெளியே தெரியாமல் பல குற்றங்கள் நடக்கின்றன. சைபர் குற்றவாளிகளின் தாக்குதலுக்கு அப்பாவி மக்கள் பலியாகக்கூடாது.  எனவே சைபர் குற்றங்களைத் தடுக்க திறமையான பயிற்சி பெற்ற நிபுணர்களை உருவாக்குவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். சைபர் பாதுகாப்பு தொடர்பான வேலைகளை இளைஞர்கள் ஆர்வமுடன் தேர்ந்தெடுக்க நாம் ஊக்கப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

Label