OUR CLIENTS
ஆர் கே நகர் இடைத்தேர்தல் : போலீஸ் கட்டுப்பாட்டு அறை துவக்கம்
ஆர் கே நகர் இடைத்தேர்தல் : போலீஸ் கட்டுப்பாட்டு அறை துவக்கம் Posted on 27-Nov-2017 ஆர் கே நகர் இடைத்தேர்தல்  : போலீஸ் கட்டுப்பாட்டு அறை துவக்கம்

சென்னை, நவ. 27
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்காக கமிஷனர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.  

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 21ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பண பட்டுவாடா புகார் வந்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இப்போது மீண்டும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தொகுதியில் முறைகேடுகள் நடக்காமல் கவனித்துக் கொள்ள வேண்டும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதையடுத்து பண பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் வழங்குதல், பேனர் ஒட்டுவதில் தகராறு போன்ற பிரச்னைகளை கட்டுப்படுத்த சென்னை மாநகர போலீஸ் சார்பில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.    தொகுதியில் கட்சி தொண்டர்கள் இடையே ஏற்படும் பிரச்னை, பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்னை மற்றும் முறைகேடுகள் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம் . உதவி கமிஷனர் ரவி தலைமையில் செயல்படும் இந்த கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Label