OUR CLIENTS
இந்தியா உருவாக காரணமாக இருந்தவர்களை நினைத்து பெருமை கொள்வோம்: பிரதமர் மோடி
இந்தியா உருவாக காரணமாக இருந்தவர்களை நினைத்து பெருமை கொள்வோம்: பிரதமர் மோடி Posted on 27-Nov-2017 இந்தியா உருவாக காரணமாக இருந்தவர்களை நினைத்து பெருமை கொள்வோம்: பிரதமர் மோடி

புதுடெல்லி, நவ.27
இந்தியா உருவாக காரணமாக இருந்த முன்னோர்களை நினைத்து பெருமை கொள்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இந்திய அரசியலமைப்பு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பு தினத்தில், இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய சிறந்த பெண்களுக்கும், ஆண்களுக்கும் நாம் தலைவணங்குவோம். அவர்களை எண்ணி பெருமை கொள்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.   அரசியலமைப்பு தினம் குறித்த வீடியோ ஒன்றையும் டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

இந்திய அரசியலமைப்பிற்காக பாடுபட்ட அம்பேத்கர் உள்ளிட்டோரை இந்நாளில் நினைவு கொள்வோம். அரசியலமைப்பின் மதிப்பையும், மரியாதையையும் எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும்.  இந்தியா உருவாக காரணமாக இருந்த முன்னோர்களை நினைத்து பெருமை கொள்வோம் என பிரதமர் நரேந்திர  மோடி குறிப்பிட்டுள்ளார்.

Label