OUR CLIENTS
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் : ஓ. பன்னீர் செல்வம் உறுதி
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் : ஓ. பன்னீர் செல்வம் உறுதி Posted on 27-Nov-2017 ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்  : ஓ. பன்னீர் செல்வம் உறுதி

காஞ்சிபுரம், நவ.27
சென்னை - ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உறுதியாக தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் டிசம்பர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.  ஏற்கனவே, ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டபின்பு, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. தற்போது, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அணியினர் கோரியிருந்தனர்.  

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அடங்கிய ஒருங்கிணைந்த அ.தி.மு.க. அணிக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் வழங்கியது. எனவே இந்த தேர்தலில் ஒன்றிணைந்த அணி அ.தி.மு.க. என்ற பெயரில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது.

நேற்று, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு நியாயமானது என மக்கள் கருதுகின்றனர்.  இது நியாயத்திற்கு கிடைத்த தீர்ப்பு. இதனை மக்கள் வரவேற்று உள்ளனர். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  கூறியுள்ளார்.

Label