OUR CLIENTS
ஆர்.கே. நகர் அனைத்து வாக்குச்சாவடிகளையும் பதற்றமானவையே! : கூடுதல் ஆணையர் ஜெயராமன்
ஆர்.கே. நகர் அனைத்து வாக்குச்சாவடிகளையும் பதற்றமானவையே! : கூடுதல் ஆணையர் ஜெயராமன் Posted on 27-Nov-2017 ஆர்.கே. நகர் அனைத்து வாக்குச்சாவடிகளையும் பதற்றமானவையே! : கூடுதல் ஆணையர் ஜெயராமன்

சென்னை, நவ.27
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை அமைதியான முறையில் நடத்த அனைத்து வாக்குச்சாவடிகளையும் பதற்றமானவையாக கருதி உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத் தேர்தலை முன்னிட்டு, வாகன சோதனை, ரோந்து பணிகளை போலீசார் தற்போதிலிருந்தே முடுக்கிவிட்டுள்ளனர். இப்பணிகளை, சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் ஜெயராமன், இணை ஆணையர் சுதாகர், துணை ஆணையர் செஷாங் சாய் ஆகியோர் பார்வையிட்டனர். பின் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் ஜெயராமன், ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 11 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வெளியில் இருந்து வரும் வாகனங்கள் போலீசார் சோதனைக்குப் பின்பே அனுமதிக்கப்படுவதாகக் கூறினார்.

தொகுதிக்குட்பட்ட 7 காவல்நிலையங்களிலும், ஆய்வாளர்கள் தலைமையில் 24 மணி நேரமும் விழிப்புடன் காவல்துறையினர் பணியாற்றுவார்கள் என அவர் தெரிவித்தார். ஏற்கெனவே உள்ள 12 ரோந்து வாகனங்களுடன் கூடுதலாக 12 என மொத்தம் 24 ரோந்து வாகனங்களில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து வந்து, அமைதியான முறையில் இடைத்தேர்தல் நடைபெற காவல்துறை பணிகளை மேற்கொள்ளும் என அவர் குறிப்பிட்டார்.  மேலும், ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் கண்காணிக்கப்படுவதாகவும், உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தேர்தல் முடியும் வரை காவல்துறையிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளும் பதற்றமானதாகக் கருதப்பட்டு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Label