OUR CLIENTS
ஜெயலலிதா வழியில் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் இபிஎஸ் : பாராட்டிய ஓபிஎஸ்
ஜெயலலிதா வழியில் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் இபிஎஸ் : பாராட்டிய ஓபிஎஸ் Posted on 27-Nov-2017 ஜெயலலிதா வழியில் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் இபிஎஸ் : பாராட்டிய ஓபிஎஸ்

சென்னை, நவ.27
ஜெயலலிதா வழியில் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவை கபளீகரம் செய்துவிடலாம் என நினைத்தவர்களின் கனவை தகர்த்து, உண்மைத் தொண்டர்களுக்கே கொடி, சின்னம் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் உரிமையாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் சிந்தனை வழியில் பல புதிய திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருவதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

பிரமாணப் பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்து தேர்தல் ஆணையம் சின்னத்தை வழங்கியுள்ளதாகவும், அனைவரும் ஒன்றுபட்டு நின்றதால்தான் இரட்டை இலை மீண்டும் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தேர்தலில் மகத்தான வெற்றிபெறுவோம் என்றும், இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெற்று, ஜெயலலிதாவுக்கு சமர்ப்பணம் செய்வோம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Label