OUR CLIENTS
மும்பை தொடர் குண்டு தாக்குதல் நினைவு தினம் : மத்திய அமைச்சர்கள் அஞ்சலி
மும்பை தொடர் குண்டு தாக்குதல் நினைவு தினம் : மத்திய அமைச்சர்கள் அஞ்சலி Posted on 27-Nov-2017 மும்பை தொடர் குண்டு தாக்குதல் நினைவு தினம்  : மத்திய அமைச்சர்கள் அஞ்சலி

புதுடெல்லி, நவ.27
2008-ம் ஆண்டு இதே நாளில் மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தின் நினைவு தினமான நேற்று அச்சம்பவத்தில் பலியானவர்களுக்கு மத்திய அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
 
பாகிஸ்தானை சேர்ந்த 10 தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் நுழைந்து மும்பையில் கடந்த 26-11-2008 அன்று குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொடூர தாக்குதல்கள் நடத்தினர். 18 போலீஸ் அதிகாரிகள் உள்பட 164 பேர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை பாகிஸ்தானில் அமர்ந்து கொண்டு, மூளையாக இருந்து செயல்படுத்திய ஹபீஸ் சயீத் என்பவனை பாகிஸ்தான் அரசு சமீபத்தில் வீட்டுச் சிறையில் இருந்து விடுவித்துள்ளது.

இந்நிலையில், மும்பை தாக்குதல் சம்பவத்தின் ஒன்பதாவது ஆண்டு நினைவு தினமான நேற்று மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, அதே துறையின் இணை அமைச்சர்  ராஜ்யவர்தன் ரத்தோர் ஆகியோர் அந்த கொடூர தாக்குதலில் பலியானவர்களுக்கு தங்களது டுவிட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Label