OUR CLIENTS
உலக சுகாதார அமைப்பின் துணை டைரக்டர் ஜெனரலாகும் சென்னை மருத்துவர்
உலக சுகாதார அமைப்பின் துணை டைரக்டர் ஜெனரலாகும் சென்னை மருத்துவர் Posted on 29-Nov-2017 உலக சுகாதார அமைப்பின் துணை டைரக்டர் ஜெனரலாகும் சென்னை மருத்துவர்

புதுடெல்லி, நவ.29
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் செயலராக சவுமியா சுவாமிநாதன் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அவர் கடந்த மாதம் உலக சுகாதார அமைப்பின் துணை டைரக்டர் ஜெனரலாக தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின்னரே அவர் அந்த பதவியை ஏற்க முடியும். மத்திய அரசு அனுமதி அளிக்குமா என்பதில் சந்தேகம் நீடித்துவந்தது.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பணி நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு நேற்று முன்தினம் கூடியது. இதில், சென்னையைச் சேர்ந்தவரான சவுமியா சுவாமிநாதன் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் 2019 நவம்பர் 18ம் தேதி வரை உலக சுகாதார அமைப்பின் துணை டைரக்டர் ஜெனரல் பதவியை ஏற்க ஒப்புதல் வழங்கப்பட்டது. மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திலுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் செயலராகவும் பதவி வகித்துவரும் சவுமியா சுவாமிநாதன்(57) காசநோய் தொடர்பான ஆய்வில் தன்னை நீண்ட காலனாக ஈடுபடுத்தி கொண்டு சேவையாற்றி வருகிறார். 1992 ஆம் ஆண்டு முதல் சென்னையில் பணிபுரியத் துவங்கிய சவுமியா சுவாமிநாதன்(57) சுமார் 23 ஆண்டுகளக உடல்நலம் சார்ந்த ஆய்வில் ஈடுபட்டவராவார். 

Label