OUR CLIENTS
ஆதார் வழக்கு விசாரணை மீண்டும் தள்ளிவைப்பு
ஆதார் வழக்கு விசாரணை மீண்டும் தள்ளிவைப்பு Posted on 29-Nov-2017 ஆதார் வழக்கு விசாரணை மீண்டும் தள்ளிவைப்பு

புதுடெல்லி, நவ.29
அரசின் சலுகைகளையும், நலத்திட்ட உதவிகளையும் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை அவசியம் என்று மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால் ஆதார் அட்டைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்து உள்ளனர். இந்த மனுவை நேற்று  முன்தினம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில்  நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.

இதற்கிடையே பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீடிக்க விரும்புவதாக மத்திய அரசு  ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில், டெல்லி-மத்திய அரசுக்கு இடையே உள்ள பிரச்னையை முடித்த பிறகு ஆதார் இணைப்பது பற்றி  அரசியல் சாசன பெஞ்ச் இடைக்கால உத்தரவை பிறப்பிக்கும் என்று நீதிபதிகள்  திங்கள் கிழமை தெரிவித்தனர்.

இப்போது வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள்ளும்,மொபைல் எண்களில் பிப்ரவரி 6ம் தேதிக்குள்ளும் இணைக்க வேண்டும் என்று காலக்கெடு உள்ளது.

Label