OUR CLIENTS
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதலாக 6 புதிய நீதிபதிகள் நியமனம்
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதலாக 6 புதிய நீதிபதிகள் நியமனம் Posted on 29-Nov-2017 சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதலாக 6 புதிய நீதிபதிகள் நியமனம்

புதுடெல்லி, நவ.29
சென்னை உயர் நதிமன்றத்துக்கு கூடுதலாக 6 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்ட நீதிபதிகளாக இருந்த ரமா திலகம், தாரணி, கிருஷ்னவல்லி, ஹேமலதா, பொங்கியப்பன் மற்றும் ராஜ மாணிக்கம் ஆகிய ஆறு பேரை புதிய நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதனால், உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் தலைமை நீதிபதி இந்திரா பாணர்ஜி புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளுக்கு விரைவில் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட 6 பேரில் 4 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Label