OUR CLIENTS
புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை பாமகவின் ஆலோசனைகளை உதயசந்திரனிடம் அன்புமணி வழங்கல்!
புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை பாமகவின் ஆலோசனைகளை உதயசந்திரனிடம் அன்புமணி வழங்கல்! Posted on 29-Nov-2017 புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை பாமகவின் ஆலோசனைகளை உதயசந்திரனிடம் அன்புமணி வழங்கல்!

சென்னை, நவ.29
பள்ளிக் கல்வியின் புதிய பாடத் திட்டத்தில் பாமகவின் கருத்துகளைச் சேர்ப்பது தொடர்பாக அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி, பள்ளிக் கல்வித்துறையின் புதிய பாடத்திட்ட செயலாளர் உதயசந்திரனைச் சந் தித்தார்.

தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளுக்கும் அடுத்த மூன்றாண்டுகளில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும், 1,6,9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் கடந்த மே மாதம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

இதற்காக உயர் நிலைக்குழு, கலைத் திட்டக்குழு ஆகிய 2 குழுக்கள் அமைக்கப்பட்டன. ஏராளமான ஆசிரியர்கள், துறைசார் வல்லுநர்கள், கல்வியாளர்கள் குழுவில் இடம் பெற்றனர். இதனையடுத்து புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை நவம்பர்  20-ம் தேதி வெளியிடப்பட்டது.

அத்துடன் பாடத்திட்டம் குறித்து கல்வியாளர்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு அவை பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வரைவு அறிக்கை தொடர்பான ஆலோசனைகளையும், கருத்துகளையும் பாமக சார்பில் முன்வைக்க அன்புமணி, டிபிஐ வளாகத்தில் உதயசந்திரனை சந்தித்தார். அப்போது ஒவ்வொரு பாடத்திலும் சேர்க்க, நீக்க, மாற்ற வேண்டிய பாடங்கள் குறித்த விளக்கம் அடங்கிய குறிப்பேட்டை உதயசந்திரனிடம் அன்புமணி அளித்தார்.

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்வி வாரியங்களையும் ஒன்றாக இணைக்க வேண்டும், தமிழ் வழிக் கல்வி கட்டாயம், கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு, கட்டமைப்பு வசதிகள், நீதிபோதனை வகுப்புகள் , தொழில்பயிற்சி, யோகாவுக்கு முக்கியத்துவம் உள்ளிட்ட பொது ஆலோசனைகளும், பாடங்களுக்கான ஆலோ சனைகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Label