OUR CLIENTS
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம் யாருக்கும் ஆதரவு கிடையாது
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம் யாருக்கும் ஆதரவு கிடையாது Posted on 29-Nov-2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம் யாருக்கும் ஆதரவு கிடையாது

சென்னை, நவ.29
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை புறக்கணிப் பதாகவும் யாருக்கும் ஆதரவில்லை என்றும் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் சிகிச்சைக்காக நேற்று (செவ்வாய்க்கிழமை) விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து அவரிடம் வினவினர் அதற்கு, “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது. இந்த தேர்தலில் நாங்கள் யாருக்கும் ஆதரவு கொடுக்கமாட்டோம். ஆர்.கே.நகரில் பணபலம் உள்ளவர்களே வெற்றி பெறுவார்கள்.

தேர்தல் முறை கேடுகளைத் தடுக்க மாலை 5 மணிக்கு மேல் பிரசாரம் செய்யத் தடை விதிக்க வேண்டும். அப்படி கட்டுப்பாடு விதித்தால், பணப் பட்டுவாடா செய்பவர்களே அந்தக் கட்டுப்பாட்டை விமர்சிப்பார்கள்” என்று கூறினார். 

வழக்கமான பரி சோதனை..
விஜயகாந்த் சிகிச்சை குறித்து சில தினங் களுக்கு முன்னர் அறிக்கை வெளியிட்ட அக்கட்சி, “தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்காக செல்வது வழக்கம். அதேப்போல இந்த ஆண்டும் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூரிலுள்ள தனியார் மருத்துவ மனைக்கு ஒரு வாரத்துக்குள் செல்லவு ள்ளார்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Label