OUR CLIENTS
குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைந்தவுடன் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்
குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைந்தவுடன் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் Posted on 05-Dec-2017 குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைந்தவுடன் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்

புதுடெல்லி, டிச.5-
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜனவரி 15-ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், 30-ம் தேதி மீண்டும் பட்ஜெட் கூட்டத்தொடருக்காக கூட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் வருகிற 15-ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து சிறிது இடைவெளிக்கு பிறகு ஜனவரி 30-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் அன்றைய தினம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் உரையாற்றுகிறார். மறுநாள் (ஜனவரி 31-ந் தேதி) பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

இதனையடுத்து, பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்கிறார். இதை அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளதால், இந்த பொது பட்ஜெட் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தாக்கல் செய்யும் முழுமையான கடைசி பட்ஜெட் ஆகும்.

வரி விகிதம் குறித்து அருண்ஜெட்லி தலைமையிலான ஜ.எஸ்.டி. கவுன்சில் அவ்வப்போது கூடி முடிவு செய்வதால் பட்ஜெட்டில் மறைமுக வரி விதிப்பு தொடர்பாக அறிவிப்புகள் இருக்காது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். அதே நேரம் வருமான வரி, கார்ப்பரேட் நிறுவன வரி உள்ளிட்ட நேரடி வரி விதிப்பு பற்றிய அறிவிப்பு இடம் பெறும்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆண்டு தோறும் பிப்ரவரி மாத இறுதி நாளில் பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வது வழக்கமாக இருந்தது. இதனால் நிதியாண்டு தொடங்கும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பட்ஜெட்டை அமல்படுத்துவதில் சிரமம் இருந்து வந்தது. இதையடுத்து அருண் ஜெட்லி முதல் முறையாக இந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுதவிர ரெயில்வே துறைக்கு தனியாக ஒரு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இதையும் மாற்றி ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஜூலை 1-ம் தேதி அமலுக்கு வந்தது. அதன் பிறகு முதல் முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Label