OUR CLIENTS
வெள்ள நிவாரண பணிகளை அரசு முறையாக செய்யவில்லை: தினகரன் ஆவேசம்
வெள்ள நிவாரண பணிகளை அரசு முறையாக செய்யவில்லை: தினகரன் ஆவேசம் Posted on 05-Dec-2017 வெள்ள நிவாரண பணிகளை அரசு முறையாக செய்யவில்லை: தினகரன் ஆவேசம்

நாகர்கோவில், டிச.5
தமிழக அரசு வெள்ள நிவாரண பணிகளை முறையாக செய்யவில்லை என ஒக்கி புயல் பாதிப்புகளை பார்வையிட்ட பின் தினகரன் கூறினார்.

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் பாதிப்புகளை பார்வையிட டி.டி.வி. தினகரன் நேற்று நாகர்கோவில் வந்தார். தோவாளையில் மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை பார்த்து ஆறுதல் கூறினார். அங்கிருந்து திருப்பதிசாரம் சென்றார். அங்கும் பயிர்நிலங்கள், விளை நிலங்களில் மழை நீர் தேங்கியிருப்பதை பார்வையிட்ட பின் நிருபர்களிடம் கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் தாக்கியதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி தோவாளை மற்றும் திருப்பதிசாரம் ஆகும். ஆனால் இங்கு 6 நாட்கள் ஆகியும் எந்த நிவாரண பணிகளும் நடைபெறவில்லை. ஒரு அதிகாரி கூட இங்கு வந்து மக்களை சந்திக்கவும் இல்லை, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் இல்லை.

அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் அதனை கொண்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். ஆனால் அமைச்சர்கள் பொய் சொல்வதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். வெள்ள நிவாரண பணிகளை அரசு முறையாக செய்யவில்லை.

ஆடம்பர விழாக்களை நடத்துவதிலும், கட்-அவுட் வைப்பதிலும் காட்டும் அக்கறையை மக்கள் நிவாரண பணிகளிலும் காட்டவேண்டும். பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு அரசு அதிகாரிகளை அனுப்பி அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனே செய்ய வேண்டும். இதில் மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக நாகர்கோவில் வந்த டி.டி.வி. தினகரனை முன்னாள் அமைச்சர் பச்சைமால், என்ஜினீயர் லெட்சுமணன், சகாயராஜ் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். 

Label