OUR CLIENTS
ஆர்.கே. நகர் ஒவ்வொரு தெருவிலும் கண்காணிப்பு கேமரா, மத்திய ரிசர்வ் போலீஸ்- திமுக மனு
ஆர்.கே. நகர் ஒவ்வொரு தெருவிலும் கண்காணிப்பு கேமரா, மத்திய ரிசர்வ் போலீஸ்- திமுக மனு Posted on 05-Dec-2017 ஆர்.கே. நகர் ஒவ்வொரு தெருவிலும் கண்காணிப்பு கேமரா, மத்திய ரிசர்வ் போலீஸ்- திமுக மனு

சென்னை, டிச.5
இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே. நகரில் ஒவ்வொரு தெருவிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவதுடன், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை நிறுத்த வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுக அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி தலைமையில் குழு ஒன்று மனு தந்துள்ளது.

ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக உட்பட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அங்கு தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது.

இந்நிலையில் திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும்,  எம்பியுமான ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை நேற்று சந்தித்து மனு அளித்துள்ளனர். அதில் கூறியுள்ளதாவது:  ஆர்.கே. நகர் சட்டசபை தொகுதியில் கடந்த முறை வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த புகார் காரணமாகவும், சமூகவிரோத சக்திகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாலும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

எனவே, ஆர்.கே. நகர் தொகுதிக்கு மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் கண்காணிப்பை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும். அத்தொகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய ரிசர்வ் படை போலீஸ் எண்ணிக்கை போதுமான அளவு இல்லை.  எனவே, அங்குள்ள ஒவ்வொரு தெருக்களிலும் குறைந்தபட்சம் இரண்டு மத்திய ரிசர்வ் படை போலீசார் நிறுத்தப்படவேண்டும். அதுபோலவே ஒவ்வொரு தெருவிலும் கண்காணப்பு கேமரா பொருத்த வேண்டும். இதில் பதிவாகும் வீடியோ காட்சிகளை எங்கள் கட்சி பிரதிநிதிகள் பார்வையிடவும் அனுமதி வழங்க வேண்டும்.  இவ்வாறு, திமுகவின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Label