OUR CLIENTS
தினகரனுக்கு தொப்பி சின்னம் : இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு
தினகரனுக்கு தொப்பி சின்னம் : இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு Posted on 06-Dec-2017 தினகரனுக்கு தொப்பி சின்னம் : இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு

புதுடெல்லி, டிச.6
தொப்பி சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனி சாமி, ஓ.பி.எஸ். அணிக்கு வழங்கிய தேர்தல் கமி‌ஷன் உத்தரவை எதிர்த்து டி.டி.வி. தினகரன் டெல்லி கோர்ட்டில் அப்பீல் செய்தார். அந்த நேரத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனக்கு தொப்பி சின்னம் வழங்க கோரி அவர் மற்றொரு மனுவையும் தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. தினகரனின் கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. தொப்பி சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் கமி‌ஷன்தான் முடிவு செய்யும் என்று தெரிவித்து அவரது மனுவை நீதிபதி இந்தர்மித் கவூர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தொப்பி சின்னம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். தங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்று அவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Label