OUR CLIENTS
வீடு வீடாக சென்று ஓட்டு கேட்க அனுமதி பெறவேண்டும் : தேர்தல் கமி‌ஷன் புது உத்தரவு
வீடு வீடாக சென்று ஓட்டு கேட்க அனுமதி பெறவேண்டும் : தேர்தல் கமி‌ஷன் புது உத்தரவு Posted on 06-Dec-2017 வீடு வீடாக சென்று ஓட்டு கேட்க அனுமதி பெறவேண்டும் : தேர்தல் கமி‌ஷன் புது உத்தரவு

சென்னை, டிச.6
ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ளும் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்க அனுமதி பெறவேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ்லக்கானி கூறியுள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ்லக்கானி தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-  ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ளும் வேட்பாளர்கள் காலை 3 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே வீடு வீடாக சென்று வாக்கு கேட்க வேண்டும். எந்த பகுதிக்கு வாக்கு கேட்க செல்கிறோம் எத்தனை பேர் உடன் வருகிறார்கள், எத்தனை பேர் வெளியூர் ஆட்கள் என்ற விவரங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.

முறையாக அனுமதியில்லாமல் வீடு வீடாக வாக்கு கேட்க சென்றால் தேர்தல் விதிமுறை மீறல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வேட்பாளரின் அனுமதி இல்லாமல் அவருக்கு ஆதரவாக யாராவது பிரசாரத்தில் ஈடுபட்டால் தேர்தல் விதி மீறல் குற்றமாகும்.  ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.28 லட்சம் வரை செலவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.

எ.டி.எம் மூலம் பணப் பட்டுவாடா நடக்கிறதா என்பது பற்றி தொகுதிக்கு உள்ளேயும், வெளியேயும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. ஆன்லைன் அடிப்படையில் பண பரிமாற்றம் நடந்தால் ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்படும்.   இதுபோன்ற குற்றங்களுக்காக தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்படும். கூடுதலாக 5 கம்பெனி என 25 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக அனுப்ப கோரிக்கை வைத்துள்ளோம்.

ஆர்.கே.நகரில் முக்கியமான இடங்களில் 196 ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு பண பரிமாற்றம் குறித்து கண்காணிக்கப்படும்.   தேர்தல் பணிக்காக 4 பார்வையாளர்கள் வந்துள்ளனர். இன்னும் 5 பேர் ஒரிரு தினங்களில் வர உள்ளனர். 61 பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Label