OUR CLIENTS
குஜராத் சட்டசபை தேர்தல்: பாஜக பெரும்பான்மை இழப்பு?
குஜராத் சட்டசபை தேர்தல்: பாஜக பெரும்பான்மை இழப்பு? Posted on 06-Dec-2017 குஜராத் சட்டசபை தேர்தல்: பாஜக பெரும்பான்மை இழப்பு?

புதுடெல்லி, டிச.6
குஜராத் சட்டசபைத் தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜக தனது செல்வாக்கை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. அங்கு எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸின் ஆதரவு வாக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல் கட்ட வாக்கு வரும் டிசம்பர் 9ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு நான்கு நாள்களே இருக்கும் நிலையில் திங்களன்று பாஜகவும் காங்கிரஸும் தலா 43 சதவீத வாக்குகளைப் பெறக்கூடும் என்ற நிலையை எட்டியுள்ளன.

மீதம் உள்ள மற்ற கட்சிகள் சுயேச்சைகள் 14 சதவீத வாக்குகளைப் பெறும் என்று லோக்நீதி சிஎஸ்டிஎஸ் – ஏபிபி நியூஸ் நடத்திய 3 சுற்றுக் கருத்து கணிப்பின் இறுதியில் மதிப்பீட்டை வெளியிட்டது.  முதல் சுற்றுக் கருத்துக் கணிப்பு 2017 ஆகஸ்டு மாதமும், 2வது சுற்றுக் கருத்துகணிப்பு அக்டோபர் மாதமும், 3வது சுற்றுக் கருத்துக்கணிப்பு 2017 நவம்பர் மாதமும் நடத்தப்பட்டதாக லோக்நீதி அறிவித்துள்ளது.

ஆகஸ்டு மாதத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் 59 சதவீதமாக இருக்கும் என்று முதல் சுற்றுக் கணிப்பின் இறுதியில் மதிப்பிடப்பட்டது. ஆகஸ்டு மாதத்தில் காங்கிரஸ் கட்சி கையில் 29 சதவீத வாக்குகளே இருந்தன. மற்ற கட்சிகள் 12 சதவீத வாக்குகளை கையில் வைத்திருந்ததாக கருத்துக் கணிப்பு கூறுகிறது.

2வது சுற்றுக் கருத்துக் கணிப்பு அக்டோபர் மாதத்தில் நடந்தது. ஆகஸ்டு மாதத்தில் 59 சதவீத வாக்குகளை வைத்திருந்த பாஜக 12 சதவீத வாக்குகளை இழந்து 47 சதவீதத்துக்கு குறைந்தது.

அதே சமயம் காங்கிரஸின் வாக்குகள் 29 சதவீதத்திலிருந்து 12 சதவீதம் உயர்ந்து 41 சதவீதமாக உயர்ந்தது.  நவம்பரில் நடந்த 3வது சுற்றுக் கருத்துக் கணிப்பிலும் இதே சரிவினால் பாஜக பாதிக்கப்பட்டது. பாஜக மேலும் 4 சதவீத வாக்குகளை இழந்ததால் அதன் வாக்கு சதவீதம் 43 சதவீதமாகக் குறைந்தது.  காங்கிரஸின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்தது. அக்டோபரில் 41 சதவீதமாக இருந்த வாக்குகள் நவம்பரில் 2 சதவீதம் உயர்ந்து 43 சதவீதமாக உயர்ந்துள்ளது.  அதே சமயத்தில் அக்டோபரிலும் நவம்பரிலும் 12 சதவீதமாக மற்ற கட்சிகளின் வாக்குச் சதவீதம் நவம்பரில் 14 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று லோக் நீதியின் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

பாஜக.வின் வாக்குகள் சதவீதம் சரிவதற்கு 2 முக்கிய காரணங்கள் அடிப்படையாக இருக்கக்கூடும் என்று லோக் நீதி தெரிவித்துள்ளது.  வியாபாரிகள் பாஜகமீது பெரும் கோபத்துடன் இருக்கிறார்கள். வியாபாரிகள் மத்தியில் பாஜகவிற்கு அக்டோபர் மாதம் 4 சதவீத ஆதரவு கூடுதலாக இருந்தது. நவம்பர் மாதம் இந்த நிலை மாறிவிட்டது. பாஜகவிற்கு வியாபாரிகளின் ஆதரவு 40 சதவீதமாக குறைந்துவிட்டது. காங்கிரஸின் பலம் 43 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  பெண்கள் ஆதரவும் பாஜகவிற்கு குறைந்தது மற்றொரு காரணமாக உள்ளது. அக்டோபர் மாதத்தில் பாஜகவுக்கு 50 சதவீத பெண்கள் ஆதரவளித்தனர். அப்பொழுது காங்கிரஸுக்கு 39 சதவீத பெண்களின் வாக்குகள்தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால், நவம்பரில் இந்த நிலை மாறிவிட்டது.  பாஜகவிற்கு பெண்களின் ஆதரவு 50 சவீதத்திலிருந்து 44 சதவீதமாக குறைந்துவிட்டது. காங்கிரஸுக்கு பெண்களின் ஆதரவு 39 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்ந்துள்ளது.  அதனால் குஜராத் தேர்தல் முடிவுகள் பெரும் பரபரப்பைத் தோற்றுவிக்கக்கூடும். குஜராத் தேர்தல் முடிவுகளை அகில இந்திய அளவில் ஒரு திருப்பு முனையைச் சுட்டிக்காட்டக்கூடும்.

குஜராத் மாநிலத்தை பொதுவாக 4 பகுதியாகப் பிரித்து ஆய்வு மதிப்பீடுகளை மேற்கொள்வது வழக்கம்.   செளராஷ்டிரம் மற்றும் கட்ச் பகுதி 54 தொகுதிகளைக்கொண்டது. நவம்பர் மாதம் கருத்துக்கணிப்பின்படி இங்கு பாஜக 45 சதவீத வாக்குகளுடன் முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் இந்த 54 தொகுதிகளிலும் 39 சதவீத வாக்குகளைத்தான் பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  வடக்கு குஜராத் 59 தொகுதிகளை உடையது. இங்கு 49 சதவீத வாக்குகளுடன் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது. பாஜக இந்த 53 தொகுதிகளில் 45 சதவீத வாக்குகளைத்தான் பெறும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  மத்திய குஜராத் 40 தொகுதிகளைக் கொண்டது. இங்கு பாஜகவின் வாக்கு வங்கி 41 சதவீதமாகவும் காங்கிரஸின் வாக்கு வங்கி 40 சதவீதமாக உள்ளது.  எதற்கு குஜராத் 35 தொகுதிகளைக் கொண்டது, இங்கு 42 சதவீத வாக்குகளைப் பெற்று காங்கிரஸ் முதலிடத்தில் 40 சதவீத வாக்குகளுடன் பாஜக 2வது இடத்திலும் உள்ளது.  தொகுதி வாரியாகக் கணக்கிட்டால் 94 தொகுதிகளில் பாஜக முன்னிலையிலும் 88 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையிலும் உள்ளன.

Label