OUR CLIENTS
முதலாம் ஆண்டு நினைவு தினம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் அஞ்சலி : முதல்வர், துணைமுதல்வர் தலைமையில் மவுன பேரணி
முதலாம் ஆண்டு நினைவு தினம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் அஞ்சலி : முதல்வர், துணைமுதல்வர் தலைமையில் மவுன பேரணி Posted on 06-Dec-2017 முதலாம் ஆண்டு நினைவு தினம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் அஞ்சலி : முதல்வர், துணைமுதல்வர் தலைமையில் மவுன பேரணி

சென்னை, டிச.6
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முதலாண்டு நினைவு தினத்தை துக்க தினமாக அனுசரித்து முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  மற்றும் அமைச்சர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கறுப்பு சட்டை அணிந்து மவுன ஊர்வலமாக வந்து மலர்தூவி அஞ்சலி நேற்று செலுத்தினர். 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி உடல் நல குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் கடந்த ஆண்டு 2016 டிசம்பர் 5ம் தேதி அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல் எம்.ஜி.ஆர்.- அண்ணா சமாதிகளுக்கு நடுவில் அடக்கம் செய்யப்பட்டது. 

ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று அதிமுக&வினரால் அனுசரிக்கப்பட்டது. அவரது சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் மவுன ஊர்வலமும் நடைபெற்றது.  அண்ணா சிலையில் இருந்து அதிமுகவினர் ஊர்வலமாக சென்றனர். முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அமைதிப் பேரணி வாலாஜாரோடு, விருந்தினர் மாளிகை வழியாக சென்று மெரினா கடற்கரையை அடைந்தது.

ஓபிஎஸ்., ஈபிஎஸ், அமைச்சர்கள் அனைவருமே கருப்பு சட்டை அணிந்திருந்தனர். முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுலா இந்திரா உள்ளிட்டோர் கறுப்பு நிற புடவையில் வந்திருந்தனர். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து அமைதி பேரணியில் பங்கேற்றனர். 

ஜெயலலிதா சமாதியில் எடப்பாடி கே பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். எம்ஜிஆர் சமாதியின் முன் மேடை அமைக்கப் பட்டுள்ளது. அப்பகுதியில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதா நினைவு நாளையொட்டி மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் நிரப்பி வழிந்தது. அவரது சமாதியில் பெண்கள் சிலர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.   வாலாஜா சாலையில் 10 அடிக்கு ஒரு வரவேற்பு பேனர் அமைக்கப்பட்டுள்ளது.  அண்ணாசாலை முதல் எழிலகம் வரையிலும் கடற்கரை சாலை பகுதி முழுவதும் அதிமுகவினர் குவிந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது.

முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தலைமை யிலான அதிமுகவினர் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்திய பின் டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அண்ணா சிலையில் இருந்து அமைதி ஊர்வலம் சென்று  சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.   மேலும், ஜெயலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தன் பேரவை சார்பில் அஞ்சலி செலுத்தினார். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மெரீனா கடற்கரை சாலையில் எங்கெங்கும் மனித தலைகளாக காட்சி அளித்தன.
 

Label