OUR CLIENTS
2 ஜி வழக்கில் 21-ம் தேதி தீர்ப்பு : நீதிபதி ஓ.பி. சைனி அறிவிப்பு
2 ஜி வழக்கில் 21-ம் தேதி தீர்ப்பு : நீதிபதி ஓ.பி. சைனி அறிவிப்பு Posted on 06-Dec-2017 2 ஜி வழக்கில் 21-ம் தேதி தீர்ப்பு : நீதிபதி ஓ.பி. சைனி அறிவிப்பு

புதுடெல்லி, டிச.6
2 ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக எழுந்த வழக்கில் வரும் 21-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய  முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியின்போது, 2007&08ம் ஆண்டில் டெலிகாம்  கம்பெனிகளுக்கு செல்போன் சேவைக்கான 122 உரிமங்களுடன் 2ஜி ஸ்பெக்ட்ரம்  வழங்கப் பட்டதில், முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிஐ  மற்றும் அமலாக்கப் பிரிவு விசாரித்து, டெல்லி சிறப்பு கோர்ட்டில் 4 குற்றப்  பத்திரிகைகளை தாக்கல் செய்தன.

 இந்த வழக்குகளில் முன்னாள்  தொலைத் தொடர்பு அமைச்சர் ராஜா, திமுக எம்பி கனிமொழி உட்பட 29 பேர் மற்றும்  14 கம்பெனிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது.  இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ, விசாரணை நடத்தியது.  

இந்த வழக்கு 6 வருடங்களாக டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. டெல்லி சிறப்பு கோர்ட்டில்  நீதிபதி ஓ.பி. சாய்னி விசாரித்த ஸ்பெக்ட்ரம் வழக்குகளில், வக்கீல்களின்  இறுதிவாதம் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நிறைவடைந்து, தீர்ப்பு  ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில், டெல்லி சிறப்பு கோர்ட்டில்  ஸ்பெக்ட்ரம் வழக்குகள் கடந்த நவம்பர் 7ம் தேதி விசாரணைக்கு வந்தன. அப்போது,  ‘அதிக அளவிலும், தொழில்நுட்ப ரீதியிலும் ஆவணங்கள் இருப்பதால், தீர்ப்பு  இன்னும் தயாராகவில்லை. அடுத்த விசாரணையில் தீர்ப்பு  தேதி முடிவு செய்யப்படும்’ என்று நீதிபதி சாய்னி அறிவித்து, விசாரணையை  டிசம்பர் 5ம் தேதிக்கு (நேற்று )தள்ளிவைத்து தீர்ப்புதேதி வெளியிடப்படும் என அறிவித்திருந்தார். இவ்வாறு மூன்று முறை இதற்கான அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.  

தீர்ப்பு தேதி எப்போது என்ற எதிர்ப்பார்ப்பு நிலவிய நிலையில், வரும் 21-ம் தேதி காலை 10.30 மணிக்கு தீர்ப்பு விபரங்கள் அறிவிக்கப்படும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி சைனி நேற்று அறிவித்துள்ளார். மேலும் தீர்ப்பு எழுதும் பணி முடிவடைந்து விட்டதாகவும் நீதிபதி சைனி தெரிவித்தார்.

இதனையடுத்து, கோர்ட்டில் இருந்து வெளியே வந்த கனிமொழியிடம் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ‘பார்க்கலாம்’ என்று பதிலளித்தார்.  தீர்ப்பு தேதி அறிவிப்பை கேட்க பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி கோர்ட் வளாகத்திற்கு வந்திருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். நிச்சயம் குற்றவாளிகள் சிறைக்கு செல்வார்கள் என்றும் அவர் கூறினார். 2ஜி வழக்கில் நாட்டிற்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என்றும் சுப்பிரமணிய சாமி தெரிவித்தார். தீர்ப்பு வெளியாகும் தேதி அன்று தான் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Label