OUR CLIENTS
ஓகி புயல் சீற்றம் : குஜராத்தில் ராகுல், மோடி, அமித்ஷா பிரசார கூட்டங்கள் ரத்து
ஓகி புயல் சீற்றம் : குஜராத்தில் ராகுல், மோடி, அமித்ஷா பிரசார கூட்டங்கள் ரத்து Posted on 07-Dec-2017 ஓகி புயல் சீற்றம் : குஜராத்தில் ராகுல், மோடி, அமித்ஷா பிரசார கூட்டங்கள் ரத்து

காந்தி நகர், டிச.7
குஜராத் மாநிலத்தில் ஓகி புயல் சீற்றம் மற்றும் மழை காரணமாக பிரதமர் மோடி, அமித்ஷா, ராகுல்காந்தி ஆகியோரது தேர்தல் பிரசார கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநில சட்டசபைக்கு வருகிற 9ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் தொகுதிகளில்  இன்று (7ம் தேதி) மாலையுடன் பிரசாரம் ஓய உள்ளது. இந்நிலையில் ஓகி புயல் சீற்றம் காரணமாக குஜராத் கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அந்த புயல் குஜராத் கடலோரத்தை நெருங்கியது. தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவை பதம் பார்த்த அந்தப் புயல் குஜராத்திலும் குறிப்பாக சூரத் மண்டலத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தும் என்ற அபாயம் இருந்தது.

ஆனால் நேற்று  அதில் மாற்றம் ஏற்பட்டது. குஜராத் அருகே கடலில் மையம் கொண்டிருந்த அந்த புயல் கரையை கடக்கவில்லை. அதற்கு பதில் அது ஒரே இடத்தில் மையம் கொண்டபடி வலு இழந்தது. அடுத்த 2 நாட்களுக்குள் ஓகி புயல் மேலும் வலு இழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி விடும் என்று தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் வரும் 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது.

தொடர் மழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக குஜராத் தேர்தல் பிரசாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராகுல்காந்தி நேற்று முன்தினம் புஜ் நகரில் பிரசாரம் செய்தார். பிறகு அவர் ஹெலிகாப்டரில் மற்ற ஊர்களுக்கு செல்ல முயன்றார். ஆனால் வானிலை மோசமாக இருந்ததால் அவர் நேற்றைய பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார். நேற்று (6ம் தேதி) ராகுல்காந்தி சூரத், தபி, நர்மதா, டங்ஸ் நகரங்களில் பேச இருந்தார். அந்த கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டது. அது போல இன்று  (7ம் தேதி) அவர் மத்திய குஜராத் பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய இருந்ததும் ரத்து செய்யப்பட்டது. 

பிரதமர் நரேந்திர மோடி நேற்று சூரத் நகரில் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பலத்த மழை காரணமாக அந்த பிரசார கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷாவின் இன்று பிரசார கூட்டங்களும் ரத்து செய்து ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Label