OUR CLIENTS
பாராளுமன்ற கேன்டீனில் ‘ஃபுட் கார்ட்’ முறை விரைவில் அறிமுகம்
பாராளுமன்ற கேன்டீனில் ‘ஃபுட் கார்ட்’ முறை விரைவில் அறிமுகம் Posted on 07-Dec-2017 பாராளுமன்ற கேன்டீனில் ‘ஃபுட் கார்ட்’ முறை விரைவில் அறிமுகம்

புதுடெல்லி, டிச.7
பாரளுமன்றத்தில் உள்ள கேன்டீனில் பணம் செலுத்துவதற்கு பதிலாக கார்ட் பயன்படுத்தும் முறை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது.
 
பாராளுமன்றத்தில் நான்கு கேன்டீன்கள் உள்ளன. அதில் ஒன்று மட்டுமே பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்துகின்றனர். மீதியுள்ள மூன்று கேன்டீன்களை பார்வையாளர்கள், அலுவலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள்  பயன்படுத்துகின்றனர்.   கேன்டீன்களில் கடந்த ஆண்டு பணமதிப்பிழப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட உடன் சபா நாயகர் சுமித்ரா மாகாஜன் பி.ஓ.எஸ். கருவியை அறிமுகப்படுத்தினார். கிரிடிட் கார்டை பயன்படுத்தி உணவுகள் பெற்று கொள்ளலாம். ஆனால் அந்த திட்டம் தோல்வியடைந்தது. மக்கள் பணம் செலுத்தி உணவு வாங்குவதற்கே முன்னுரிமை கொடுத்தனர்.

இந்நிலையில், கேன்டீனில் விரைவில் புதிய கார்ட் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரெயிலில் வழங்கப்படுவது போன்று கார்ட் வழங்கப்படும். அந்த கார்டை பயன்படுத்தி உணவை பெற்று கொள்ளலாம். ஸ்டேட் பேங்க் உடன் இணைந்த உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் எளிதாக உணவுகளை வாங்கலாம் என மக்களவை செயலகத்தின் கூடுதல் செயலாளர் அசோக் குமார் சிங் கூறினார்.  பணம் தீர்ந்தவுடன் பாராளுமன்றத்தில் உள்ள வங்கி கிளையில் கார்டில் பணம் செலுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் பணம் பரிமாற்றம் குறைக்கப்படும். டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது கருப்பு பணம், ஊழல் போன்றவற்றை குறைக்க உதவும். 

Label