OUR CLIENTS
மேற்குவங்கத்துக்கு மத்தியஅரசு நிதி நிறுத்தம்
மேற்குவங்கத்துக்கு மத்தியஅரசு நிதி நிறுத்தம் Posted on 07-Dec-2017 மேற்குவங்கத்துக்கு மத்தியஅரசு நிதி நிறுத்தம்

கொல்கத்தா, டிச.7 
மேற்குவங்கத்துக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக ரூ.13,714.32 கோடி  தரவேண்டும்.ஆனால் இது வரை மத்தியஅரசு அந்த நிதியை தராமல் நிறுத்திவைத்துள்ளதாக மாநில முதல்வர் மம்தா  குற்றம் சாட்டி உள்ளார். 

 மத்தியஅரசு தருவது கடன் தான் என்றாலும் அதை நிறுத்தி வைத்துள்ளனர். இருந்தாலும் எந்த வளர்ச்சி திட்டமும் மாநிலத்தில் நிறுத்தப்படவில்லை. வெள்ளக்காலத்தில் கூட மத்திய அரசு நிவாரண நிதி தரவில்லை.  விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடாக மாநில அரசு தான் ரூ.185கோடி தந்தது என்றும் அவர் குறை கூறிஉள்ளார். அடுத்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல்கள் நடக்க உள்ள நிலையில்  ஊரக கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.12ஆயிரம் கோடியை மாநில அரசு கூடுதலாக ஒதுக்கி உள்ளது. இந்தப் பணத்தில் சாலைவசதிகள் செம்மைப்படுத்தப்படும், குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் மம்தா குறிப்பிட்டார்.

Label