OUR CLIENTS
ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான : கல்வி உதவித்தொகையை குறைப்பு ஆணையை திருப்ப பெறவேண்டும் - கடற்படை அட்மிரல் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்
ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான : கல்வி உதவித்தொகையை குறைப்பு ஆணையை திருப்ப பெறவேண்டும் - கடற்படை அட்மிரல் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் Posted on 07-Dec-2017 ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான : கல்வி உதவித்தொகையை குறைப்பு ஆணையை திருப்ப பெறவேண்டும் - கடற்படை அட்மிரல் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்

புதுடெல்லி, டிச.7
ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையை குறைத்து வெளியிட்ட ஆணையை திரும்ப பெற வேண்டும் என கடற்படை அட்மிரல் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
போரில் இறந்த, காணாமல் போன அல்லது ஊனமுற்ற ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. அவர்களின் படிப்பு, விடுதி கட்டணம், புத்தக கட்டணம் மற்றும் சீருடை போன்றவை வாங்க உதவித்தொகை வழங்கப்பட்டது.  ஆனால் அது தற்போது 10 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது. அதற்கான ஆணையை ஜூலை 1-ம் தேதி வெளியிட்டது. அந்த ஆணையை திரும்பி பெறுமாறு கடற்படை அட்மிரல் சுனில் லான்பா பாதுகாப்பு படை மந்திரி நிர்மலா சீதாராமிற்கு கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில் அவர் எழுதியிருந்ததாவது:-   ராணுவத்தில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் நாட்டிற்காக தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கின்றனர். அவர்கள் அரசாங்கத்தால் பாரட்டப்பட வேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்காக உழைக்கும் அவர்களின் குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும். குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையை குறைப்பது சரியன்று. இதனால் 3 ஆயிரத்து 400 ராணுவ வீரர்களின் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் இந்த ஆணையை திரும்ப பெற வேண்டும். என கூறியிருந்தார்.

Label