OUR CLIENTS
ஆர்.கே.நகரில் இன்னும் 5,117 போலி வாக்காளர்கள் : உயர்நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் முறையீடு
ஆர்.கே.நகரில் இன்னும் 5,117 போலி வாக்காளர்கள் : உயர்நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் முறையீடு Posted on 07-Dec-2017 ஆர்.கே.நகரில் இன்னும் 5,117 போலி வாக்காளர்கள்  : உயர்நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் முறையீடு

சென்னை, டிச.7
ஆர்.கே.நகர் தொகுதியில் 5,117 போலி வாக்காளர்கள் நீக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் மருது கணேஷ் இன்று முறையீடு செய்துள்ளார். இதையே மனுவாக தாக்கல் செய்ய மருதுகணேஷூக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் 45,000 போலி வாக்காளர்கள் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மருதுகணேஷ் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து 45,000 போலி வாக்காளர்களை நீக்கிவிட்டதாக தேர்தல் ஆணையமும் உயர்நீதிமன்றத்தில் கூறியது. ஆனால்அது உண்மை அல்ல.  ஆர்.கே.நகரில் இன்னமும் 5,117 வாக்காளர்கள்  நீக்கப்படவில்லை  என நேற்று சென்னை  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி  தலைமையிலான  பெஞ்ச்  முன்னிலையில் ஆர்.கே.நகர்  திமுக வேட்பாளர் மருதுகணேஷ் முறையிட்டார். இக்கருத்தை ஒரு மனுவாகத் தாக்கல் செய்ய மருதுகணேஷூக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான பெஞ்ச் அறிவுறுத்தியது. இம்மனுவை வேறு ஒருநீதிபதிகள் குழு  இன்று  விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Label