OUR CLIENTS
நான் சாதாரண மனிதன் பா.ஜ. விமர்சனத்துக்கு ராகுல் பதில்
நான் சாதாரண மனிதன் பா.ஜ. விமர்சனத்துக்கு ராகுல் பதில் Posted on 08-Dec-2017 நான் சாதாரண மனிதன் பா.ஜ. விமர்சனத்துக்கு ராகுல் பதில்

புதுடெல்லி, டிச.8
பிரதமர் மோடியை போல அல்ல, நான் சாதாரண மனிதன் என்று பா.ஜ.வினருக்கு ராகுல் சூடாக பதிலளித்து உள்ளார்.

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க உள்ள ராகுல் சமீபத்தில் தனது டுவிட்டரில், ஏழை-எளிய மக்களுக்காக  பா.ஜ. அரசு பணியாற்றவில்லை.பணக்காரர்களுக்காகவே செயல்படுகிறது. 
பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என விமர்சித்து  இருந்தார். 

இது தவிர   நாட்டில் விலைவாசி அதிகரித்து இருப்பது குறித்து சில புள்ளி விவரங்களையும் அதில் அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த புள்ளி விவரங்களில் தவறு இருப்பது தெரியவரவே அது ராகுலின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. இது பற்றி பா.ஜ. விமர்சித்து இருந்தது. பணவீக்கம் குறித்த புள்ளி விவரங்கள் ராகுலுக்கு சரிவரத் தெரியவில்லை என  அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இதற்கு இப்போது ராகுல் தனது  டுவிட்டரில் பதிலளித்து உள்ளார்.  அதில் பா.ஜ.நண்பர்களே!  பிரதமர் நரேந்திர மோடியை போல் அல்லாமல் நான் சாதாரண மனிதன். நாங்கள் தவறுகள் செய்வது இயல்பு. அது தான் வாழ்க்கையை இன்னும் ஆர்வமானதாக்கும்.எனது தவற்றை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. இது உண்மையிலேயே என்னை மேம்படுத்திக் கொள்ள உதவும். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன் எனக்கூறியுள்ளார்.

Label