OUR CLIENTS
கேரளாவில் மது அருந்துவதற்கான குறைந்தபட்ச வயது 23 ஆக அதிகரிப்பு
கேரளாவில் மது அருந்துவதற்கான குறைந்தபட்ச வயது 23 ஆக அதிகரிப்பு Posted on 08-Dec-2017 கேரளாவில் மது அருந்துவதற்கான குறைந்தபட்ச வயது 23 ஆக அதிகரிப்பு

திருவனந்தபுரம், டிச. 8
கேரளாவில் மது அருந்துவதற்கான குறைந்தபட்ச வயது 23 ஆக அதிகரிப்பது என மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.  

கேரளாவில் மது அருந்துவதற்கு குறைந்தபட்ச வயது 21 ஆக உள்ளது. இதை 23 ஆக உயர்த்துவது என மாநில அமைச்சரவை கூட்டத்தில் நேற்று முடிவெடுக்கப்பட்டது. இது தொடர்பாக கேரள மதுபான சட்டம் மற்றும் வெளிநாட்டு மது சட்டங்களில் திருத்தம் கொண்டு வரவேண்டும். மேலும் வயது குறைவான இளைஞர்களுக்கு மது விற்பனை செய்பவர்களுக்கு தண்டனை விதிக்க வேண்டும். இது தொடர்பாக அடுத்த சட்டசபை கூட்டதொடரில் சிறப்பு மசோதா கொண்டுவரப்பட உள்ளது.  

இந்தியாவில் மது குடிப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஆந்திரா,தெலுங்கானா,கர்நாடகா,சிக்கிம்,இமாச்சல பிரதேச மாநிலங்கள் உள்ளன. தமிழகத்தை விட சிறிய மாநிலமான கேரளாவுக்கு வரி மூலம் ஆண்டுதோறும் 40 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. இதில் 25 சதவீதம் மது விற்பனை மூலம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

Label