OUR CLIENTS
அரசியல் எஜமானர்கள் கட்டளைப்படி சி.பி.ஐ., அமலாக்கத்துறை செயல்படுகிறது
அரசியல் எஜமானர்கள் கட்டளைப்படி சி.பி.ஐ., அமலாக்கத்துறை செயல்படுகிறது Posted on 08-Dec-2017 அரசியல் எஜமானர்கள் கட்டளைப்படி சி.பி.ஐ., அமலாக்கத்துறை செயல்படுகிறது

புதடெல்லி, டிச. 8
அரசியல் எஜமானர்கள் கட்டளைப்படி சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை செயல்படுவதாக லண்டன் கோர்ட்டில் விஜய்மல்லையா வழக்கறிஞர் புகார் கூறினார்.

இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா (61), அவற்றை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். அவர் மீது இந்தியாவின் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். இந்த வழக்கை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். லண்டனில் இருந்து  விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில், சி.பி.ஐ.,யுடன், அமலாக்கத் துறை இணைந்து செயல்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு இங்கிலாந்து அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி அவரை ஸ்காட்லாந்து போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை  இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரி லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை தலைமை மாஜிஸ்திரேட்டு எம்மா லூயிஸ் அர்பத்னோட் முன்னிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் நடந்து வருகிறது.  வருகிற 14ம் தேதி வரை விசாரணை நடைபெறுகிறது. வழக்கு விசாரணைக்காக விஜய் மல்லையா கோர்ட்டில் ஆஜரானார்.  இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் இங்கிலாந்து அரசின் வழக்கு சேவை மையம் ஆஜரானது. நாடு கடத்தல் வழக்கில் புகழ்பெற்ற மார்க் சம்மர்ஸ் தலைமையிலான குழுவினர் இந்த வழக்கில் இந்தியா சார்பில் வாதாடினர். இந்திய வங்கிகளில் பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாயை விஜய் மல்லையா தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.

 இதற்கிடையே செவ்வாயன்று  வழக்கு விசாரணையின் போது மல்லையா தரப்பில்  வழக்கறிஞர் கிளாரி மன்ட்கோமெரி தலைமையிலான குழு ஆஜராகி உள்ளது.  அவர் கூறியதாவது: அரசு அளித்துள்ள ஆதாரம் எந்த அடிப்படை ஆதாரம்  இல்லாமல் சர்ச்சைக்குரியதாக உள்ளது. நேரடி ஆதாரம் எதுவும் இல்லை.விஜய் மல்லையா மீது நம்பகமான வழக்கு இல்லை.அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்டுள்ளது. மல்லையா மோசடியில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. கடன்களை மோசடி செய்வதற்கோ அல்லது கடனை திருப்பி செலுத்துக்கூடாது என்ற நோக்கமோ அவருக்கு  இல்லை.

சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை  அடிக்கடி தங்கள் அரசியல் எஜமானர்களால்  நேரத்துக்கு நேரம் செயல்படுகிறது. அரசியல் நோக்கத்துடன் செயல்படுவதில் சி.பி.ஐ. க்கு நீண்ட மற்றும் மோசமான வரலாறு உண்டு. இந்திய சிறைகளின் அமைப்பு ரஷியாவை விட மோசமானது. இந்திய சிறை பாதுகாப்பானது என்று அந்த நாட்டு அரசு சொல்வதை  ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து வழக்கு  விசாரணையை நேற்று (7-ம் தேதி) நீதிபதி ஒத்திவைத்தார்.

Label