OUR CLIENTS
அரசு நல திட்டங்களுக்கு ஆதார் இணைக்க காலக்கெடு நீடிப்பு : மத்திய அரசு தகவல்
அரசு நல திட்டங்களுக்கு ஆதார் இணைக்க காலக்கெடு நீடிப்பு : மத்திய அரசு தகவல் Posted on 08-Dec-2017 அரசு நல திட்டங்களுக்கு ஆதார் இணைக்க காலக்கெடு நீடிப்பு :  மத்திய அரசு தகவல்

புதுடெல்லி, டிச. 8
அரசின் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டது.

வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு வருமானவரித்துறையில் நிரந்தர கணக்கு எண் அளிக்கப்படுகிறது. அந்த எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. அடுத்த வாரம் அரசியல் சாசன அமர்வை சுப்ரீம் கோர்ட்டு அமைக்கிறது. ஏற்கனவே அரசின் திட்டங்களை பெற ஆதார் எண் இணைப்புக்கான காலக்கெடு வருகிற ஆகஸ்ட் 31-ந்தேதி வரை நீடிக்கப்பட்டது. நேற்று இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆஜராகி, அரசின் நல திட்டங்களின் பலன்களை பெறுவதற்காக ஆதார் எண் இணைப்புக்கான காலக்கெடுவை மத்திய அரசு அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை நீடிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

மேலும் செல்போன் சேவைகளை தொடர்ந்து பெறுவதற்கு ஆதார் இணைக்க கடைசி தேதி கோர்ட்டு உத்தரவு வரும் வரை பிப்ரவரி 6-ந்தேதி என்பது நீடிக்கும் என்றும் தெரிவித்தார்.

Label