OUR CLIENTS
தேசத்தை கட்டமைத்ததில் அம்பேத்கரின் பங்கு முக்கியமானது : பிரதமர் மோடி புகழாரம்
தேசத்தை கட்டமைத்ததில் அம்பேத்கரின் பங்கு முக்கியமானது : பிரதமர் மோடி புகழாரம் Posted on 08-Dec-2017 தேசத்தை கட்டமைத்ததில் அம்பேத்கரின் பங்கு முக்கியமானது : பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி, டிச. 8
தலைநகர் டெல்லியில் அம்பேத்கர் சர்வதேச மையத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். ஜன்பாத்தில் அமைந்துள்ள இந்த மையத்தில் அம்பேத்கரின் உருவ சிலையையும் மோடி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தேசத்தை கட்டமைத்ததில் அம்பேத்கரின் பங்கு முக்கியமானது. வரலாற்றில் அவரது பாத்திரத்தை குறை மதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகள் இருந்தன, ஆனால் அத்தகைய முயற்சிகள் வெற்றியடையவில்லை. அவரது பாத்திரத்தை அழிக்க நடந்த முயற்சிகளும் தோல்வியில் தான் முடிந்தது. டாக்டர் அம்பேத்கரின் எண்ணங்களையும் போதனைகளையும் மேம் படுத்துவதற்கான மையமாக இது இருக்கும்.

சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினை களை ஆராயவும் இந்த மையம் ஒரு முக்கிய இடமாக இருக்கும். இந்த மையம் இளைஞர்களுக்கு பாபா சாஹேப் அம்பேத்கரின் கருத்துக்களை பார்க்கவும், புரிந்து கொள்ளவும் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Label