OUR CLIENTS
மத்திய அரசு அலுவலகங்களில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை!
மத்திய அரசு அலுவலகங்களில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை! Posted on 11-Dec-2017 மத்திய அரசு அலுவலகங்களில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை!

சென்னை, டிச.11
மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டின்படி 27 விழுக்காடு வேலைவாய்ப்பு வழங்காததற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் எந்தத் துறையிலும் இட ஒதுக்கீட்டின் அடிப் படையில் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்று நாளிதழ் ஒன்றில் வெளிவந்துள்ள செய்தியை மேற்கோள் காட்டியுள்ளார். 24 அமைச்சகங்களில் குறைந்த அளவில் மட்டுமே இடஒதுக்கீடு நிரப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மத்திய அரசின் அமைச்சரவைச் செயலகத்தில் 64 “ஏ” பிரிவு அதிகாரிகளில் ஒருவர் கூடப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரயில்வே, உள்துறை, பாதுகாப்புத்துறை, நிதித்துறை ஆகியவை இடஒதுக்கீடு குறித்த தகவல்களை அளிக்க மறுத்துள்ளதையும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

 பிற்படுத்தப் பட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டது குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிடுமாறு அவர் கோரியுள்ளார். மொத்த மக்கள் தொகையில் 52விழுக்காடு உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீட்டை 50விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Label