OUR CLIENTS
1 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் மின் இணைப்புகள்
1 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் மின் இணைப்புகள் Posted on 11-Dec-2017 1 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் மின் இணைப்புகள்

சென்னை, டிச.11
மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த 1 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்று மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

சென்னையில், இந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு எரிசக்தி- 2017 என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. 

இதை தொடங்கி வைத்து மின்துறை அமைச்சர் பி.தங்கமணி கூறியதாவது:- தமிழகம் இன்று மின்மிகை மாநிலமாக திகழ்கிறது. இதன் அடிப்படையில் வீடுகளுக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு ஒரே நாளில் இணைப்பு வழங்கப்படுகிறது.  கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இத்திட்டத்தின் கீழ் இதுவரை 1 லட்சத்து 72 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மின் தேவை மற்றும் மின் வினியோகம் முன்னறிவிப்பு ஆணையத்தின் ஆண்டறிக்கையின்படி தமிழகத்தில் 11,649 மில்லியன் யூனிட் மின்சாரம் உபரியாக உள்ளது.  இது மகாராஷ்டிராவில் 11,333 யூனிட்டாகவும், மத்திய பிரதேசத்தில் 8,853 யூனிட்டாகவும், டெல்லியில் 5,774 குஜராத்தில் 4,380 யூனிட் உபரியாக உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டம் 2023 அடிப்படையில் மேற் கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தமிழகம் இன்றைக்கு மின்மிகை மாநிலமாக திகழ்கிறது. இதை அடிப்படையாக கொண்டு தொழில் நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்ய முன்வர வேண்டும். புதிய அல்லது ஏற்கனவே உள்ள தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் வழங்கப் படுகிறது.

புதுப்பிக்கத்தக்க எரி சக்தியின் மூலம் 10,590 மெகாவாட் மின் உற்பத்தி செய்யத் தேவையான கட்டமைப்புகளை அரசு நிறுவி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Label