OUR CLIENTS
கன்னியாகுமரியில் ரயில், சாலை மறியல் 9000-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு
கன்னியாகுமரியில் ரயில், சாலை மறியல் 9000-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு Posted on 11-Dec-2017 கன்னியாகுமரியில் ரயில், சாலை மறியல் 9000-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு

கன்னியாகுமரி, டிச.11
கன்னியாகுமரியில் ரயில் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட 9000க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், கடந்த 30-ம் தேதி தாக்கிய ‘ஓகி’ புயலில் சிக்கி மாயமானார்கள்.

பல மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்களை தேடும் பணியில் கடற்படை, கடலோர காவல்படை மற்றும் விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். மாயமான மீனவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி நீடித்து வருகிறது. 

 கடலில் காணாமல் போன மீனவர்கள், இதுவரை கரை திரும்பாத நிலையில் அந்த மீனவர்களை மீட்க விரைவாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டமும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மீனவர்கள் தரப்பில் குழித்துறை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.  மீனவர்கள் தரப்பில் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

 மீனவர் பிரச்னை தொடர்பாக மார்த்தாண்டம், குழித்துறை பகுதியில் ரயில் மறியல் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 
மீனவர்களின் போராட்டம் தொடர்பாக இதுவரை 9000-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 சின்னத்துறை, குழித்துறை, நீரோடி, இரவிபுத்தன்துறை ஆகிய இடங்களில் ரயில் மறியலில் ஈடுபட்டவர்கள்,  மார்த்தாண்டம் மற்றும் களியாக்காவிளையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Label