OUR CLIENTS
இந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி
இந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி Posted on 11-Dec-2017 இந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன்  உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி

சென்னை, டிச.11

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு திடீர் என்று உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து அவர் சிகிச்சை பெறுவதற்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பாண்டியனின் உடலை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவருக்கு சளியின் தாக்கம் அதிகம் இருந்ததும், மூச்சுத்திணறல் பிரச்னை ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாச கருவி பொறுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 2 நாட்களில் சிகிச்சை முடிந்து தா.பாண்டியன் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தா. பாண்டியனை திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று, உடல் நலம் விசாரித்தார். 

Label