OUR CLIENTS
உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா
உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா Posted on 11-Dec-2017 உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா

புவனேஸ்வர், டிச.11
உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடரின் இறுதி போட்டியில் அர்ஜெண்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. 

 ஹாக்கியில் சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடர் போட்டிகள் ஒடிசாவில் நடைபெற்று வந்தது. நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. இரவு 7:30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் ஆஸ்திரேலியா -அர்ஜெண்டினா அணிகள் மோதின.

இப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை தட்டிச்செல்லும் முனைப்புடன் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவும், ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜெண்டினாவும் விளையாடினர். ஆட்டம் தொடங்கிய 17வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஜெர்மி ஹைவார்ட் பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார். அடுத்த நிமிடமே அர்ஜெண்டினா வீரர் அகஸ்டின் புகல்லோ கோல் அடித்து பதிலடி கொடுத்தார். இதையடுத்து ஆட்டம் 1-1 என சமனானது.

தொடர்ந்து இரு அணியினரும் கொல் அடித்து முன்னிலை பெற முயற்சித்தனர். இருப்பினும் கோல் அடிக்கும் அனைத்து முயற்சிகளும் வீணானது. அதன்பின் கடைசியில் 58வது நிமிட ஆட்டத்தில் பிளேக் கோவர்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார்.  அதைத்தொடர்ந்து மேற்கொண்டு எந்த கோலும் அடிக்காததால் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

முன்னதாக மாலை 5:15 மணிக்கு நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தியது.

Label