OUR CLIENTS
வட மாநிலங்களில் பனிப்பொழிவு - மழை எச்சரிக்கை
வட மாநிலங்களில் பனிப்பொழிவு - மழை எச்சரிக்கை Posted on 12-Dec-2017 வட மாநிலங்களில் பனிப்பொழிவு - மழை எச்சரிக்கை

புதுடெல்லி, டிச.12
காஷ்மீர், இமாசல பிரதேசம் உள்பட 12 மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கடும் பனி பொழிவுடன் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை காலம் முடிவுக்கு வரும் நிலையில் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவுகிறது.

காஷ்மீர், இமாசல பிரதேசம் உள்பட 12 மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கடும் பனி பொழிவுடன் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதில் மேலும் கூறியிருப்பதாவது:-   பஞ்சாப், அரியானா, சண்டிகாரில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்யும். காஷ்மீரின் ஜம்மு பிராந்தியத்திலும், இமாசல பிரதேசத்தின் பள்ளத்தாக்கு பகுதி, பஞ்சாப் மற்றும் அரியானாவின் மேற்கு பகுதியில் பனிப்புயல் வீசும்.  பஞ்சாப், அரியானா, சண்டிகார், டெல்லி, ராஜஸ்தானின் பெரும் பகுதியில் குளிர் அதிகரிக்கும். இமாசலபிரதேசம் மற்றும் காஷ்மீரில் நாளையும் பலத்த மழை அல்லது கடும் பனிப்பொழிவு நீடிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Label