OUR CLIENTS
குருவாயூர் கோவில் யானைக்கு மதம் பிடித்து பாகனை குத்திக்கொன்றது
குருவாயூர் கோவில் யானைக்கு மதம் பிடித்து பாகனை குத்திக்கொன்றது Posted on 12-Dec-2017 குருவாயூர் கோவில் யானைக்கு மதம் பிடித்து பாகனை குத்திக்கொன்றது

கொழிஞ்சாம்பாறை, டிச.12
கேரள மாநிலத்தில் குருவாயூர் கோவில் சிறப்பு பூஜையின்போது யானைக்கு மதம் பிடித்ததில் பாகன் நெஞ்சு, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் குத்தியதில் பாகன் பரிதாபமாக இறந்தார்.

கேரள மாநிலம் குருவாயூரில் புகழ்பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமியை தரிச்க ஆண்டுதோறும் வருவது வழக்கம்.  இந்நிலையில் கோவிலில் நேற்று முன்தினம் மாலை சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது கோவிலுக்கு சொந்தமான ஸ்ரீ கிருஷ்ணன் என்ற யானை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. யானை பாகனாக சுபாஷ் (37) என்பவர் இருந்தார்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் யானை ஊர்வலமாக வந்தது. திடீரென யானைக்கு மதம் பிடித்து பிளிறி அங்குமிங்கும் ஓடியது. அதிர்ச்சியடைந்த பக்கதர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். யானையை சமாதானப்படுத்த பாகன் முயன்றார்.  அப்போது ஆவேசமடைந்த கோவில் யானை தந்தத்தால் பாகன் சுபாசை நெஞ்சு, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் குத்தியது. இதில் பாகன் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் விழுந்தார். பின்னர் யானை கோவிலை சுற்றி ஆவேசமாக சுற்றியது. 

அப்போது பாகனை பக்தர்கள் மீட்டு திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாகன் சுபாஷ் பரிதாபமாக இறந்தார்.  இதனிடையே கால்நடை டாக்டர் அங்கு வரவழைக்கப்பட்டார். மயக்க ஊசி செலுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் யானை மயக்கம் அடைந்தது. 2 மணி நேர பரபரப்பு அடங்கியது. அதன்பின்னர் யானையை மற்ற பாகன்கள் சமாதானப்படுத்தினர்.  குருவாயூர் கோவில் வரலாற்றிலேயே கோவில் வளாகத்தில் கோவில் யானை பாகனை குத்திக்கொன்றது இதுவே முதல்முறை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்தது.

Label